மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரி!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் இன்று (11) இடம் பெற்றது.

தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து நிர்மானிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தில் தித்வா புயலினால் பல பாலங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ள பாலங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.

மேலும் நிபுணர் குழுவினர் பாதிக்கப்பட்ட பாலங்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் என்.கதிசன், நிறைவேற்று பொறியியலாளர் எஸ். கிரிசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கே.வில்வராசா, பொறியியலாளர் எஸ்.கலாதரன் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவதீதன், ரி.நிர்மலராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.