ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு உரிய பயனாளிகளிடத்தில் கையளிக்கப்பட்டது.
மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், குறித்த கிராம சேவகர் பிரிவின் கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


