கிழக்கு மாகாண “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி முதலிடம்

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” அறிவுப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி சிறப்பான திறமை வெளிப்படுத்தி முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

கமு/கமு/அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இறுதி 16 பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவான கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி, அதனைத் தொடர்ந்து பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தை வெற்றி கொண்டு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

இறுதிச்சுற்றில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியுடன் நடைபெற்ற கடும் போட்டியில் அறிவுத் திறமை, வேகமான பதில்கள் மற்றும் குழு ஒத்துழைப்பை வெளிப்படுத்தி, வெற்றியை உறுதி செய்து முதல் இடத்தை கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களை முறையாக பயிற்சியளித்து வழிநடத்திய ஆசிரியர்களுக்கும், அதேபோல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் கல்வி சமூகத்தின் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்படுகின்றன.