எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் “விளையாட்டினூடாக பாதுகாப்பான புலம் பெயர்வு ” எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டும் மகளீர்க்கான கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் வெபர் மைதானத்தி இன்று (05) இடம் பெற்றது.
மாவட்ட செயலகத்துடன் IOM நிறுவனம் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு நாள் கபடி மற்றும் கால்பந்து போட்டி இடம் பெற்று வருகின்றன.
இதன் போது ஐந்து மகளீர் விளையாட்டு கழகங்களும், ஐந்து மகளீர் கால்பந்து அணியினரும் கலந்து தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
இந் நிகழ்வில் IOM நிறுவன இணைப்பாளர் திருமதி மேரி லம்பேர்ட், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயகுமார்,
மாவட்ட வெளிநாட்டு வேலை வைப்பு உத்தியோகத்தர் கே.ரமணபிரசாத், மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


