78வது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) தேசிய ரீதியாக இடம்பெறுகிறது.
இலங்கை திருநாடு ஐரோப்பியர்களிடமிருந்து விடுபட்டு 78 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளமையினை நினைவுகூர்ந்து இன்றைய தினம் தேசிய நிகழ்வு கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசநாயக அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்ற அதேவேளை அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அதிகார சபைகள் என பல்வேறு அரச நிறுவனங்களிலும் இன்று காலை வேளையில் கொடியேற்றத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு குறித்த அரச திணைக்கள நிறுவனத்தின் தலைவரால் உரைநிகழ்த்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திலும் சுதந்திர தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.





