(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமூர்த்தி அலுவலகத்தில் (29) இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா இதில் அதிதியாகக் கலந்து கொண்டு இவ் வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிரஜாசக்தி தவிசாளர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


