தேசிய ரீதியாக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

தேசிய ரீதியாக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.

2026ம் ஆண்டின் 1ம் தரத்தில் இணையும் மாணவர்களுக்கு இடம்பெற்ற சுய செயற்பாடுகள், விளையாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து கற்றல் செயற்பாட்டினுள் புதிய கல்வி சீர்திருத்தத்திற்கமைய உள்வாங்குவதற்காக இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்றைய தினம் அம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் அங்கமாக மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்றது. இதன்போது மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு 1ம் தர மாணவர்களும் அதிதிகளும் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து பூசை வழிபாடும், பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளர் உ. விவேகானந்தம், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பாடசாலை பகுதி தலைவர்கள், முன்பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.