மண்முனைப்பற்று, ஆரையம்பதி பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழாவும்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலக ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகமும் தைப்பொங்கல் விழா நேற்று (27) பிரதேச செயலாளர் (பதில் கடமை) உ. உதயஸ்ரீறிதர் தலைமையில் இடம்பெற்றது.

செல்வாநகர் சிவன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவணியுடன் கதிர் எடுத்துவரப்பட்டு விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் கதிர்களுக்கு பூசைசெய்து கதிர் சூடடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மண்முனைப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் கி. இளங்குமுதன், கணக்காளர் அ. மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன் ஆகியோருடன் உத்தியோகத்தர்கள், பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.

ஒருபுறம் சங்காபிஷேக நிகழ்வுகளும் மறுபுறம் ஒவ்வோரு கிளைகளும் வெவ்வேறு வகையான பொங்கல் பானை வைத்ததுடன், பிரதேச செயலகம் விழாக்கோலம் பூண்டது.

இதன்போது உத்தியோகத்தர்கள் பாடல் இசைத்ததுடன் தமது வெளிக்களத் திறமைகளையும வெளிப்படுத்தினர்.