புனித மிக்கேலின் திருவுருவச்சிலை திரை நீக்கம் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

புனித மிக்கேல் கல்லூரியில் புனர்நிர்மானம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்பு கோபுரத்தின் புனித மிக்கேல் திருவுருவச்சிலை திரை நீக்கும் நிகழ்வான பாடசாலையில் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் இன்று (29) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அருட் தந்தை போல் சற்குணநாயகம் அடிகளினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டு புனித மிக்கேலின் திருவுருவச்சிலை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

புனித மிக்கேல் கல்லூரியின் 94 ஆண்டில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் மேற்கொள்ளப்பட்ட வரவேற்பு கோபுரம் இன்று திரை நீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாவட்டத்தின் மிகவும் பழைமையான பாடசாலைகளில் ஒன்றான புனித மிக்கேல் கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கற்றல் செயற்பாடுகள் மேற்கொண்டு வருவதுடன் தேசிய மட்டத்தில் பலதரப்பட்ட போட்டிகளில் இப் பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.