2026ம் ஆண்டின் இடமாற்றத்திற்கு எதிராக அணி திரளும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்.(Video)

 

2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பாக அதிர்சியுற்றுள்ளதாக 2026.01.25ந் திகதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது 2026ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின் மூலம் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

2026.01.25ந்திகதி களுவாஞ்சிகுடியில் ஒன்று சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பாக கடந்த 21வருடமாக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் யுத்த காலத்தில் கடமையாற்றி தற்போது ஐம்பது வயதை கடந்த நிலையில் இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றம் தமக்கு உளவியல், உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவித்தனர். அதாவது திருகோணமலை சென்று வருவதாயின் தாம் பெறும் வேதனம் போக்குவரத்திற்கு மாத்திரம் போதுமானது எனவும் செத்துக்கடன் மற்றும் ஏனைய கடன்களை பெற்றவர்கள் இதனால் மேலும் பாதிப்புள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலும் பராமரிப்பிலும் பாரிய தாக்கம் ஏற்பட்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதுவிடயமாக இடமாற்றம் செய்த உயர் அதிகாரிகளை சந்தித்து தமது நிலையினை தெளிவு படுத்தி பொருத்தமான இடத்திற்கு இடமாற்றத்தினை செய்யக்கோருவது எனவும் மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் சுனில் கந்துநெத்தி ஆகியோரை சந்தித்து தமக்கு வழங்ப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பாக முறையிடுவது எனவும் மேன்முறையீட்டு சபையின் முடிவுகய் தமக்கு சாதகமாக அமையாத பட்சத்தில் சட்டரீதியாக நியாhம் கோருவது எனவும் மனித உரிமை ஆணைக்குழுவினை நாடுவது எனவும் கருத்துரைத்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரனி எம்.ஏ.சுமத்திரன் அவர்களை அணுகி சட்ட ஆலோசனை பெற்றதுடன் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களிடமும் தமது நிலமைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.