நாடளாவிய ரீதியிலுள்ள அரச மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 8 மணி முதல் 48 மணித்தியாலங்களில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலவச சுகாதார சேவை மற்றும் மருத்துவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், சிறுநீரக மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் என்பன வழமைப்போல் இயங்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை ஏ.எம்.எஸ் என்ற மருத்துவ நிபுணர்களின் சங்கம் இன்றைய போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்திருக்கிறது.


