இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பாக அதிகப்படியாக குசல் மென்டிஸ் 117 பந்துகளுக்கு 93 ஓட்டங்களையும், ஜனித் லியனகே 53 பந்துகளுக்கு 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இதன்படி இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


