கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களுக்கு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களுக்கு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரியின் 1988 ஆண்டு சாதாரண தரத்தில் (O/L) கல்வி கற்ற பழைய மாணவர்களினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கஸ்ட பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறுபட்ட உதவிகள் “மகிழ்ச்சியான பாடசாலைச் செயற்றிட்டம் – 2026” எனும் தொனிப்பொருளில் இவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரை கல்வி கற்கும் 162 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதன் இரண்டாம் கட்டமாக தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்காக 198 மாணவர்களுக்கு எதிர்வரும் வாரம் கற்றல் உபகரணங்கள்
வழங்கிவைக்கப்படவுள்ளதுடன், இந் நிகழ்வுகளில் புனித மிக்கல் கல்லூரியின் 1988 (O/L) பழைய மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.