எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினரினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களிடம் இன்று (13) கையளித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக AU Lanka நிறுவன அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே. கஜன் அவர்களினால் இயந்திர அரிவால் (Chain Saw) உபகரணங்கள் இதன் போது அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த வருடம் அக்ஷன் யுனிட்டி லங்கா நிறுவனத்தினால் கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு இயந்திர படகு வழங்கி வைத்திருத்தமை குறிப்பிடத்தக்கதாகும்


