(சர்ஜுன் லாபீர்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2025ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(13) சம்மாந்துறை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹமது ஹனிபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.ஜெகராஜன், ஏ.எல் இப்திகார் பானு,சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளர் வி.வாசீத் அஹமட்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் வை.பி.எம் நவாஸ்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எப். ரஹீமா மற்றும் சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் ஏற்கனவே சமுர்த்தி நிவாரணம் பெற்று தற்போது அஸ்வெசும பெற்றுக் கொள்ளாத 17 குடும்பங்களுக்கு மக்கள் பங்களிப்புடன் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது. என்பதோடு அஸ்வெசும பெறும் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களில் கனரக வாகன பயிற்சியினை பூர்த்தி செய்த 07 இளைஞர்களும் பயனாளியின் பங்களிப்புடன் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


