நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அவ்விடங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.
அத்துடன் மிக மோசமான மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.


