வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகர்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இத்திரைப்படம் ‘மாநாடு’ படத்தை போல வித்தியாசமாக உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்திரைப்படத்தை விட 10 மடங்கு அதிக திகில் மற்றும் திரில்லுடன் இப்படம் இருக்கும் என்று படக்குழுவில் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.