விசாரணைக்காக டெல்லி சென்ற தமிழக வெற்றிக்கழக தலைவர்…!

தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக டெல்லியிலுள்ள சி.பி.ஐ அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னிலையாவதற்காக தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி காவல்துறையிடம் அக்கட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அக்கோரிக்கையை ஏற்ற டெல்லி காவல்துறை விஜய்க்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன