தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரிப்பு!

தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது.

அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

அத்துடன், கடந்த வருடத்தில் தனியார் கடன் வழங்கல் 26 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.

இதன் மூலம் மொத்த தனியார் கடன் வழங்கல் முதல் முறையாக பத்தாயிரத்து 29 பில்லியன் ரூபாயைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.