( ஹஸ்பர் ஏ.எச்_ )
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (10) காலை 10.00 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் புதிய தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.ஜே.எம்.சாலி ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பா. விபூசிதன், பொருளாளர் பி. பிரசாத், சிரேஷ்ட உபதலைவர் வடமலை ராஜ்குமார், கனிஷ்ட உபதலைவர் ஏ. எல். ரபாய்தீன்பாபு, உபசெயலாளர் மங்களநாத் லியனாராச்சி
நிர்வாக சபை உறுப்பினர்களாக
01. அ. அச்சுதன்
02.ஏ.ஆர்.எம்.றிபாஸ்,
03.ஏ.எச்.ஹஸ்பர்
04.எஸ்.கயக்கிரிவன்
05.திருமதி பி. லோஜினி
06.எம்.எல்.எம்.அஸ்வர்
07.ஏ.எம்.இப்ராஹிம்
08.ஜி.நிக்கிதொம்சன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்லின சமூகத்தை கொண்டவர்களை கொண்டு இயங்கும் ஒரே ஊடக சங்கமாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் திகழ்கிறது. இதன் மூலம் நல்லிணக்க பயணத்துக்கு ஒரு முன்னூதாரனமாக குறித்த ஊடக சங்கம் காணப்படுகிறது.
இதன் போது புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஜே.எம்.சாலி உரையாற்றுகையில் எமது சங்கம் பல உறுப்பினர்களை இழந்துள்ள நிலையில் அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறோம் சுமார் ஐம்பதான்டு கால ஊடக வரலாற்றை கொண்ட சங்கமாக நாம் பயணிக்கிறோம். எதிர்காலத்தில் திறம்பட இயங்குவதற்கு அனைவரதும் சக உறுப்பினர்களதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும் எனவும் கேட்டுக்கொண்டார்.


