ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன.
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை சேர்ந்த திருவாளர் ஞா.ஞானவேந்தன் அவர்களால் அன்பளிக்கப்பட்டது.
திருகோணமலையில் இயங்கி வரும் ஈவின்ங்ஸ் அமைப்பின் ஊடான ஏற்பாட்டில் சுமார் 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை கரையோர பகுதிகளை சேர்ந்த மனையாவெளி,வீரநகர், சோலையடி,பள்ளத்தோட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களுக்கே இது வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பகுதி மீனவர்கள் கடந்த பல நாட்களாக சீரற்ற வானிலை காரணமாகவும் கடல் சீற்றம் காரணமாகவும் கடலுக்கு செல்ல முடியாது வாழ்வாதார பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வாழ்வாதாரத்தை மேம்படுத்த குறித்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.


