கடல் சீற்றம் காரணமாக திருமலை கநையோர மீனவர்களும் பாதிப்பு

– ஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலையில் இன்றும் (10.01.2026)மழை உடனான காலநிலை நீடிக்கின்றது திருகோணமலையின் பிரதான தொழிலான மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலை அதிகரிப்பும் காரணமாக கரையோர பகுதிகளும் கடல் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீரநகர், உள்ளிட்ட கரையோர பகுதிகளும் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.

இதனால் திருகோணமலை கரையோர மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாக்க தரைக்கு மேல் மற்றும் வீட்டு முற்றத்துக்கு முன்னாலும்,வீதியோரங்களிலும் பாதுகாப்பாக இழுத்து வைத்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சீரற்ற வானிலையுடன் கூடிய கால நிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் குளிருடன் கூடிய கால நிலையும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.