வேலையில்லாப் பட்டதாரிகளையும் பயன்படுத்தி நமது நாட்டுக்கு தியதோர் அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை வகுங்கள்.

எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

காலநிலை மாற்றங்கள் நிகழும் போது அனர்த்த முகாமைத்துவ வழிமுறை முழுமையாக மாற வேண்டும். அனர்த்த முகாமைத்துவத் துறைக்கென பிரத்தியேகமான அமைச்சொன்றை ஸ்தாபித்து, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், வளிமண்டயலவியல் திணைக்களம் போலவே தேவையான புதிய நிறுவனங்களையும் ஸ்தாபித்து இவற்றை இந்த அமைச்சின் கீழ் கொண்டு வந்து, இதனைப் பலப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறே, புதிய இடர் முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். சுமார் 35,000 வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படுகின்றனர், இவர்களுக்கு இந்தத் துறைகளில் முறையான பயிற்சிகளை வழங்கி, இந்தியாவைப் போல அவசரகால படையணியை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2000 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மொனாச் பல்கலைக்கழகம், 9 நாடுகளில் 217 சூறாவளிகள் தொடர்பில் மேற்கோண்ட ஆய்வின் பிரகாரம், சுமார் 150 இலட்சம் இறப்புகள் இடம்பெற்றுள்ளன. சூறாவளிகளுக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் இறப்புகள், சூறாவளிகளால் ஏற்படும் இறப்புகளை விட அதிகம் என்று தெரியவந்துள்ளதால், புதிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.