எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாநகர சபையின் 8 வது சபையின் 11வது பொதுக் கூட்டம் இன்று (08) திகதி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் சபா மண்டபத்தில் மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
முதல்வரின் வருகையினைத் தொடர்ந்து மாநகர கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து 11வது பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியது.
முதல்வரின் அறிவிப்புக்களுடன் ஆரம்பமாகிய சபை அமர்வின் போது ஆயுள் வேத மருந்து கொள்வனவிற்கான கொடுப்பனவு சபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டமை தொடர்பாக விவாதிக்கப்பட்ட போது சபை குழு நிலைக்கு மாற்றப்பட்டு மாநகர சபையின் கணக்காளரினால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு மாநகர சபைக்குட்பட்ட சில கிராமங்களில் திண்மக் கழிவகற்றல் முறையாக இடம்பெறுவதில்லையென்றும் அதற்கு காரணம் மாநகர சபையில் போதியளவு உழவு இயந்திரங்கள் இல்லாதமையே காரணமென்றும் மிக விரைவில் உழவு இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படும் என்று இதன் போது மாநகர முதல்வர் தெரிவித்ததுடன், சபை அமர்வின் நிறைவில் மாநகர முதல்வரினால் 2026 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


