குருதேவா சிவாய சுப்ரமணியசுவாமியின் 99வது ஜயந்தி விழா

( வி.ரி.சகாதேவராஜா)

தம்பிலுவில் வினாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில், மகான் குருதேவா சிவாய சுப்ரமணியசுவாமியின் 99வது ஜயந்தி விழா ஆன்மீகப் பண்புகளுடன் நேற்று (7) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முதலில் விநாயகர் வழிபாடு பின்னர் குருபாத பூஜை மேற்கொள்ளப்பட்டு, புனித காணிக்கைகள் செலுத்தப்பட்டன.

உளமார்ந்த பிரார்த்தனைகளும், ஆரத்தியும் நடைபெற்றன. குருமகிமை குறித்து விளக்கமான ஆன்மீக சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.

பக்தி பஜனைகளும், இறைநாம பாடல்களும் பக்தர்களின் உள்ளங்களை நெகிழ வைத்தன.

இந்த ஜயந்தி விழா, குருதேவாவின் ஆன்மீக போதனைகளை நினைவூட்டி, பக்தர்களிடையே ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியதாக அமைந்தது