இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் ஏற்பாட்டில், இவ்வருடமும் தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கும் சமூகநல நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டில், சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை மையமாகக் கொண்டு, அவர்களின் கல்வி தொடர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கல்வி பயணம் எந்தவித தடையுமின்றி தொடர வேண்டும் என்பதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாக அமைந்தது.

இந்நிகழ்வில், இலங்கை நெய்னார் சமூகநல காப்பகத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் மற்றும் அக்பர் டீ முகாமையாளர் இன்ஷாப்தீன் ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நேரடியாக பொதிகளை வழங்கி வைத்தனர்.

இதன் மூலம், சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கான தங்களது அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினர். (படப்பிடிப்பு. எஸ் .ராமதாஸ் )