புதிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெ.ஸ்ரீபதி பதவியேற்பு

திருகோணமலை மாவட்ட மேலதிக புதிய அரசாங்க அதிபராக (காணி) திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதி இன்று (05)மாவட்ட செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தம்பலகாமம் பிரதேச செயலாளராக பணியாற்றிய நிலையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையினை பொறுப்பேற்றார்.
விசேட மத அனுஷ்டானங்களுடன் கடமையினை பொறுப்பேற்றார்.
இதில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார ,மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பொறுப்பேற்ற நிலையில்
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றவுள்ளார்.

2014ல் இருந்து 2025 வரையான காலப் பகுதியில் தம்பலகாமம் பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஜெ.ஸ்ரீபதி அவர்கள் இலங்கை நிருவாக சேவையை விசேட தரத்தை சேர்ந்தவராவார். இதற்கு முன்னர் குச்சவெளி உதவி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடமையினை பொறுப்பேற்றதன் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
இந் நியமனம் மூலமான சிறப்பான சேவைகளை முன்னெடுப்பதாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.