ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மண் சரிவு தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.


