நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், காலியிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


