ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதகரத்தினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்கள் கொழும்புக்கு.

ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம்  சுவிட்சர்லாந்து முழுவதும் உள்ள இலங்கை சமூகங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை சூரிச்சில் உள்ள AERO LINES  நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கலாநிதி ஸ்ரீ ராசமாணிக்கத்திடம் ஒப்படைத்துள்ளது., அவர் இந்தப் பொருட்களை கொழும்புக்கு விமானம் மூலம்  அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நன்கொடைகளில் உயர் அழுத்த துப்புரவு இயந்திரங்கள், சுகாதாரப் பொருட்கள், உடைகள், வீட்டுத் தேவைகள் மற்றும்  மாணவர்களுக்கான பாடசாலைப்பொருட்கள்  என்பன உள்ளடங்கியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரகம்  தெரிவித்துள்ளது.  இந்தநடைமுறை ஆதரவு   தாய் மண்ணில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்  என நம்பப்படுகின்றது. பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் லக வர்த்தக அமைப்பின் நிரந்தர பிரதிநிதி தூதர் சமந்தா விஜேசேகர இலங்கை சமுகத்தின் சார்பில்
திரு. பிரியங்கர டி சில்வா மற்றும் திரு. முகமது ரம்சான் ஆகியோருடன்  தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை தித்வா சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் உள்ள சமூகங்களுக்கு உதவுவதற்காக “நேரடி உதவி நீர்” அமைப்பின் சார்பாக நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய திரு. சுதாகரன் கணபதிப்பிள்ளை அவர்களினால் ஜனவரி 01, 2026 அன்று ஜெனீவாவில் உள்ள இலங்கைத்தூதகத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதி தூதர் ஹிமாலி அருணதிலகா மற்றும் உலக வர்த்தக அமைப்பின் நிரந்தர பிரதிநிதி தூதர் சமந்தா விஜேசேகர ஆகியோரிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் சைக்க்ளோன் டிட்வா (Ditwah) காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட “Rebuilding Sri Lanka” திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை சமூகத்தினர் வழங்கிய நிதி மற்றும் பொருள் உதவிகளுக்கு, ஜெனீவாவில் உள்ள இலங்கைத்தூதரகம் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உங்கள் மனிதாபிமான உணர்வும் கருணையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணங்களையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளன. இந்த உதவிகள் இலங்கை மீள்கட்டுமான முயற்சிகளுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளன.

எதிர்காலத்திலும் இத்தகைய நிதி உதவிகளை, ஜெனீவா இலங்கைத்தூதரகத்தின் வழியாக அதே வங்கி கணக்கு விவரங்கள் அல்லது QR குறியீட்டின் மூலம் வழங்க முடியும் என்பதைத் தூதரகம் நினைவூட்டுகிறது.

இலங்கையை மீள்கட்டியெழுப்பும் இந்தப் பயணத்தில், சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கை மக்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளது..