மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு தவிசாளர் மே.வினோராஜ் அவர்களின் தலைமையில் சபையின் செயலாளர் சு.சுபாறாஜன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் இன்று(01) சபையில் ஆரம்பிக்கப்பட்டது.
நிகழ்வில் தேசியக்கொடி மற்றும் உள்ளுராட்சி கொடி என்பன ஏற்றபட்டதுடன் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது மேலும் நாட்டிற்காக உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு தவிசாளர் செயலாளரினால் சிறிய கருத்துரையும் ஆற்றப்பட்டது. தவிசாளர் கருத்துரைக்கும் போது கடந்த வருடம் பிரதேச மக்களின் நலன் கருதி சிறப்பாக அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்பட்டிருந்தீர்கள் அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். செயலாளர் கருத்துரைக்கும் போது அரச உத்தியோகத்தர்களுக்கு 2026ம் ஆண்டு முதல் நடைமறைக்கு வரும் பல சுற்று நிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளது அதற்கமையா செயற்படுமாறும் தவிசாளர் வெள்ள அனர்த்த காலத்தின் போது களத்தில் நின்று சிறப்பாக கடமையாற்றியிருந்தார் அதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.



