மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது ..!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக 16.01.2025 அன்று இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் 28.12.2025 அன்று காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.