த.சுபேசன்
தாயக உறவுகளுக்கு கைகொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக 24/12 புதன்கிழமை முல்லைத்தீவில் 130மாற்றுத்திறனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர் அவர்களின் முயற்சியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் மேற்படி உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் உடையார்கட்டு தெற்கு கிராம அலுவலர்,எழுகை மாற்றுத்திறனாளிகள் குழுமத்தின் தலைவர் ரூபன், இலக்கியா தென்றல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நிதர்சன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் த.ஜெயச்சித்திரா,முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வன்னி மைந்தன் மற்றும் யாழ் மாவட்ட இணைப்பாளர் உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழஙகி வைத்திருந்தனர்.
பெரும்பாலும் சக்கரநாற்காலியின் உதவியோடு இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கே மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


