நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

MHK MARKETING( PVT) LTD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நற்பிட்டிமுனை மாஜித் மஹ்முத் தலைமையில் ஒரு தொகுதி உணவு பொதிகள் நாவலபிட்டி பல்லேகம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தில் நாவலபிட்டி பல்லேகம பிரதேசம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது..

இதனை தொடர்ந்து ஒரு நாள் துயர்துடைத்தல் எனும் தலைப்பில் கல்முனை நற்பிட்டிமுனையை சேர்ந்த MHK MARKETING( PVT) LTD நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஹ்முத் தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இப்பிரதேசத்தில் உள்ள சுமார் 150க்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு நவலபிட்டி FASHION PARK நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்கம் ஹைசர் உட்பட crown family உறுப்பினர்களும் பங்கேற்றனர்