யாழில் போதைப் பொருளுடன் கைதான மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு புனர்வாழ்வு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தியது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், காவல்துறையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களிடமிருந்து, ஐஸ் போதைப்பொருள், போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.