( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டரை கோடி பெறுமதியான கண் சத்திர சிகிச்சைக்கு பயன்படும் Phaco இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மருத்துவர் தர்மலிங்கம் பிரபாசங்கர் அதனை கையேற்றார்.
இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்தார்.
Phaco Machine என்பது Phacoemulsification Machine என்பதன் சுருக்கமாகும். இது நவீன கண் புரை (Cataract) அறுவை சிகிச்சை, மற்றும் சிக்கலான Vitreous (கண் உட்புற) சத்திர சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மேம்பட்ட மருத்துவ உபகரணமாகும்.
கண் புரை (Cataract) சத்திர சிகிச்சையில் தற்போது உலகளவில் மிகச்சிறந்த மற்றும் பாதுகாப்பான முறையாக Phacoemulsification (Phaco) கருதப்படுகிறது.


