மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் தாழ்நிலங்களின் நீர்மட்டம் நிரம்பல்நிலையைவிட அதிகரித்துள்ளது. கிடைக்கும் மழை நாளையும் மறுநாளும் தொடருமானால் 19.12.2025 மாலை அல்லது 20.12.2025 தாழ்நிலப்பிரதேச்ஙகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும், மாவட்டத்தின் வெள்ளத்திலும் செல்வாக்குச் செலுத்தும் குங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
* உன்னிச்சை 88 சதவீதம்
* உறுகாமம் 99 சதவீதம்
* நவகிரி 99 சதவீதம்
* வாகனேரி 89 சதவீதம்
* சேனநாயக்க சமுத்திரம் 82 சதவீதம்
இந்த நிலையில் பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சில குளங்கள் வான்பாய்ந்தும் வருகின்றன. முக்கியமான குளங்கள், அணைக்கட்டுகளின் நீர்வெளியேறும் அளவு
* உன்னிச்சை – 943 கன அடி நீர்
* உறுகாமம் – 500 கன அடி நீர்
* மாவடியோடை – 6348 கன அடி நீர்
அதேபோன்று ஆறுகளின் நீர்மட்டமும் உயர்வடைந்து வருகின்றது.
* லாவாணை ஆறு – 10 அடி 7 அங்குலம்
* கல்லோடை ஆறு – 7 அடி 3 அங்குலம்
* வடமுனை பாலம் – 22 அடி 3 அங்குலம்
* புலிபாய்ந்தகல் பாலம் – 9 அடி 2 அங்குலம்
* கரவெட்டி பாலம் 4 அடி 7 அங்குலம்
இதேவேளை, கடந்த 3 நாட்களாக முக்கியமான ஆறுகள் , நீர்த்தேக்கங்களை அணைமித்த பகுதிகளிலும் மொத்தமாக திரட்டியதாக 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது.
* நவகிரி – 151 மில்லிமீற்றர்
* பதியத்தலாவை – 110.8 மி.மீ.
* மங்களகம – 100.8 மி.மீ
* உன்னிச்சை – 77.4 மி.மீ
* புணானை – 112.6
இந்த நிலைமையில் தொடர்ந்தும் நாளை மழைவீழ்ச்சி தொடருமாகவிருந்தால் தாழ்நிலப்பகுதிகள், ஆற்று வடிநிலப்பகுதிகள் மற்றும் நகரநிலப்பயன்பாட்டைக்கொண்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.
குளங்கள் மற்றும் ஆறுகள் மூலமான நீர் வரத்து அதிகமாகக் காணப்படுவதால்,
ஏறாவூர்பற்று , கோறளைப்பற்று தெற்கு, மண்முணை மேற்கு, போரதீவுபற்று, கோறளைப்பற்று வடக்கு முதலிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஆற்றங்கரை, குளத்துநீர் வடிச்சல் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம்.


