கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக களுவாஞ்சிகு பிரதேச செயலாளார் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக களுவாஞ்சிகுடி, மகிழூர், எருவில் குருமன்வெளி, துறைநீலாவனை போன்ற கிராமங்களில் பெருமளவில் மக்கள் குடியிருப்புக்கள் வெள்ள நீர் நிரம்பி காணப்படுகின்றது. குறித்த நீரை வெளியேற்றும் பணியில் மண்முனை தென் எருவில் பற்ற பிரசே சபையின் தவிசாளர் மே.வினோராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது.






