எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 607 கருத்திட்டங்கள் ஊடாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மாவட்டத்தில் சுமார் 14 துறைசார் பிரிவுகளில் 6614 மில்லியன் பெறுமதியான இழப்பிடுகள் இடம் பெற்றுள்ளதுடன் வெள்ள அனர்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வீதிகள், பாலங்கள், குளங்கள், கால்வாய்கள், மற்றும் பல சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் வீடமைப்பு திட்டங்கள், வீதி அபிவிருத்தி, குடிநீர் வழங்கல், நீர்பாசன செயற்திட்டங்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீள்குடியேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், திணைக்கள தலைவர்கள்,
அரச உயர் அதிகாரிகள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


