களுவாஞ்சிக்குடியில் கடதாசிகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிநெறி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவில் இளைஞர் யுவதிகளிடையே சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரனின் நெறிப்படுத்தலின் கீழ் விதாதா வள நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது களுதாவளை 04 சாந்திபுரம் கிராம சேவகர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டதுடன், பல்வேறுபட்ட உறைகள் (மருந்தக உறைகள், பழ உறைகள் போன்றவற்றை) தயாரிக்கும் முறைகள் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் வளவாளராக சோ. மல்லிகா கலந்துகொண்டு பயிற்சியை நடாத்தியதுடன், குறித்த கிராம சேவகர் பிரிவிற்குரிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வள்ளி வேணுகோபாலன், விதாதா உத்தியோகத்தர் வ. பிரசாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி நெறியினை பிரதேச செயலக சிறுவர் உரிமை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ம. புவிதரன் மற்றும் செ. சக்திநாயகம் ஆகியோர் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.