நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிறைவு!

சண்முகம் தவசீலன்
2025.12.18

நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிறைவு

முல்லைத்தீவு மாவட்டத்தின்
நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன.

இதுகுறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிவித்தல் வெளியிடப்படுகிறது.
நாயாறு பாலத்தில் உள்ள இரண்டு பாலங்களில் ஒரு பாலத்தின் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன.

மற்றொரு சேதமடைந்த பாலம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அந்த பாலத்தின் புதிய பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

எனவே,நாயாறு பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை.

பொதுமக்கள் நாயாறு பாலத்தை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

RDA அதிகாரிகளால் நாயாறு பாலம் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்பதும் அறிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அதிகாரபூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு (DDMCU),
முல்லைத்தீவு