எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் ” பிரஜாசக்தி ” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்ட சமூக அபிவிருத்திச் சபைகளின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய கந்தசாமி பிரபு, பிரதேச செயலாளர் தட்சணா கெளரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆரையம்பதி பிரதேசத்தின் 26 கிராம மட்டக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களே இவ்வாறு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிரிவுகளின் சமூக அபிவிருத்திச் சபைத் தலைவர்கள், அங்கத்தவர்கள் எனப் பலர் பங்கு பற்றினர்.


