நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் “சுனாமி” 21 ஆண்டு நிறைவை ஒட்டி மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ஹவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றை எதிர்வரும் 27/12/2025 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற உள்ளது
இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தை தானம் செய்து இவ் உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கு கொள்ளுமாறும் “ஓர் உயிரை வாழ வைத்தவர் எல்லா உயிர்களையும் வாழ வைத்தவர் போல் ஆவார்” என்னும் ஹதீஸிற்கிணங்க சகலருக்கும் குருதிக்கொடை வழங்க சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இரத்த தானம் வழங்க கூடியவர்கள் அஸ்வர் (0774804316), நஸீர் (0776968676), ஜெமீன் (0779000771) ஆகியோரின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குருதிக்கொடை வழங்கும் பெண்களுக்கான பிரத்யேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


