ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் எம்.ஏ.நபில் பங்குபற்றுதலுடன் பிராந்திய சுகாதார பணிமனை மாநாட்டு மண்டபத்தில் (13) இடம் பெற்றது.

மாவட்ட தொழு நோய் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் லுபோஜிதா கமல்ராஜ் மேற்பார்வையின் கீழ் பொது சுகாதார பரிசோதகர் எஸ். தீபக்குமார் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற நிகழ்வில் தோழு நோய் தொடர்பான விழிப்பூட்டல் இடம் பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டமானது நாடளாவிய ரீதியில் ஒப்பிடுகையில் அதிகளவான தொழு நோயாளர்களைக் கொண்ட இரண்டாவது மாவட்டமாக காணப்பட்டுகின்றது.

மக்கள் மத்தியில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மை மற்றும் மூட நம்பிக்கைள் காரணமாக அதிகளவான பரவல்கள் இடம் பெற காரணமாக உள்ளது.

தொழுநோயானது முற்றாக குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் என்பதுடன் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதனால் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ளலாம்.

இதன் போது பிராந்திய சுகாதார பணிமனைக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியர்களுடன் இணைத்து தொழுதோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.