கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளையானது 310 லீட்டர் கொள்ளவுடைய குளிர்சாதனப் பெட்டியினை ஒட்டுசுட்டான் பசும்பொன் கூட்டுறவுச் சங்கத்திற்கு கையளிக்கும் நிகழ்வு பசும்பொன் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் இடம்பெற்றது .
கொமர்ஷல் வங்கி முள்ளியவளை கிளை முகாமையாளர் செ.தினேசன் தலைமையில் இடப்பெற்ற குறித்த நிகழ்விற்கு கொமர்ஷல் வங்கியின் வடபிராந்திய முகாமையாளர்
அ. ஜெயபாலன் அவர்கள் பிரதம விருத்தினராக கலந்து சிறப்பித்தார்.
குறித்த நிகழ்விற்கு பசும்பொன் கூட்டுறவுச்சங்க தலைவர் மு. இராசலிங்கம், பொது முகாமையாளர் சி. பிறேமலதா மற்றும் சங்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர் .
இந் நிகழ்வு குறித்து கிளைமுகாமையாளர் கருத்து தெரிவிக்கையில்:-
கொமர்ஷல் வங்கியானது கிராமம் தோறும் இயங்கும் சங்கங்களின் உற்பத்திதிறன் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாறான சமூகப்பொறுப்பு நிகழ்வுகளை இலங்கை முழுவதும் செய்துவருவதாக கூறினார்.
மேலும் நிகழ்வின் இறுதியில் கடந்த அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு கொமர்ஷல் வங்கியின் சமூகப்பொறுப்பு நிதியத்தினால் உலர்உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

