கிளிநொச்சி Reecha வில் ஊடகவியலாளர்களின் உருவச் சிலை திறந்துவைப்பு.

(Eruvil Thusi) மறைந்த மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்களுக்கான நினைவாலயம் IBC தமிழ் மற்றும் Lanka Sri வலையமைப்பு சார்பாக ரீச்சாவில் அதன் ஏற்பாட்டாளர் க.பாஸ்கரன் தலைமையில் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காலம் சென்ற தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் 16 பேருக்கான உருவச் சிலை வடிவமைக்கப்பட்டு நினைவலாயம் ஒன்று கட்டப்பட்டு க.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. வடகிழக்கு மற்றும் தென் பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கீழ் குறிப்பிடப்படும் ஊடகவியலாளர்களின் சிலை நினைவாலயத்தில் காணப்படுகின்றது 01சோபனா தர்மராசா.
02.புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி.
03.ரிச்சேட் டி சொய்சா
04.தருமரத்தினம் சிவராம்.
05.லசந்த விக்கிரமசிங்க
06.பிரதீப் எக்னலிகொட
07.மயில்வாகனம் நிமலராஜன்
08.நமசிவாயகம் சத்தியமூர்த்தி
09.இ.சிவகுருநாதன்
10.ஐயாத்துரை நடேசன்
11.விக்டர் ஐவர்
12.சி.சிவஞானசுந்தரம்
13.எஸ்.டி சிவநாயகம்.
14.சுப்பிரமணியம் சுகிர்தராஜன்.
15.எஸ்.எம். கோபாலரத்தினம்.
16ஆனந்தி சூரியப்பிரகாசம்.

நிகழ்வில் கருத்துரையாற்றிய க.பாஸ்கரன் இங்கு தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களின் உருவச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அதனை பலர் தங்களது பிழையான விமர்சனங்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகின்றது. ஊடகவியலாளர்கள் மக்களுக்காக செயற்படுபவர்கள் அவர்களை நாம் இனரீதியாக சிந்திக்க கூடாது எனவும் தற்போது 16 உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கும் எதிர்காலத்தில் உருவச்சிலைகள் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கருத்துரைத்தார்.நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களை கௌரவித்து நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் பல தமிழ் சிங்கள் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.