எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையில் தற்போது பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் தற்போதைய நிவாரண முன்னெடுப்புகளிலும் பல சிக்கல்கள் காணப்படுவது தெளிவாக தெரிகிறது. இடர் முகாமைத்துவ துறையில் சேவையாற்றி வரும் அரச அதிகாரிகள் கூட இந்நேரத்தில் முறையான எந்தவொரு திட்டமும் இல்லை என்று தெரிவிக்கின்றனர். பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் நிதி நிவாரணம் பெற்றுத் தருவோம் என்று மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், நிதி வழங்குவதற்கான எந்த வழிமுறைகளோ அல்லது சுற்றறிக்கைகளோ முறையாக வெளியிடவில்லை. இந்த வழியில் இடர் முகாமைத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், நாட்டிற்கும் மக்களுக்கும் கடவுளே துணை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போது காணப்படும் இடர் முகாமைத்துவ சட்டத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்து காலத்திற்கேற்றால் போல் மாற்றியமைக்க வேண்டும். இதற்குத் தேவையான தற்கால வளங்களை நாம் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கைகளை செய்யாது விட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடர்களில் கூட மனித உயிர்களை காப்பாற்ற முடியாது போகும். பாதிக்கப்பட்ட மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது. இந்த காலாவதியான திட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு புதிய திட்டத்தை முன்னெடுப்பது அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டித்வா சூறாவளி புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேச மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘மூச்சு’ வேலைத்திட்டத்தின் கீழ் கம்பளை வைத்தியசாலைக்கு ரூ.29 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நன்கொடையாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
410,000 ரூபா பெறுமதியான Patient Monitor 5 களும், ரூபா 2050000 மற்றும் 215,000 ரூபா பொறுமதியான Syringe pump 2 களும், (ரூபா.430,000) இவ்வாறு இன்று நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
வளிமண்டளவியல் திணைக்கள அதிகாரிகளுக்கு சுயாதீன ஊடகங்களுக்கு வந்து கருத்துத் தெரிவிப்பதற்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 11 முதல் 26 வரை தொடர்ச்சியாக 15 நாட்களாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த ஆபத்து தொடர்பில் முன்னறிவிப்புச் செய்யப்பட்டு வந்த போதிலும் அரசாங்கம் உரிய கவனத்தைச் செலுத்தவில்லை. எதிர்க்கட்சி அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு முன்மொழிந்தபோதும் கூட, அதுவும் நிராகரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாம் இன்னும் மக்களுக்கு உதவி வருகிறோம். சிலர் இந்த திட்டத்திற்கு பல்வேறு விதமான தடைகள ஏற்படுத்தி வருகின்றனர். இந்தக் கட்டமைப்புத் தடைகளை நீக்கி, நாடு குறித்து நாம் சிந்திக்க வேண்டும். 220 இலட்சம் மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். சாதி, மதம், கட்சி, வர்க்க,வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இடம்பெயர்ந்த மக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


