700 குடும்பங்களூக்கு குகதாசன் எம்பியால் நுளம்புவலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_

அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் அனைத்துக் கர்ப்பிணித் தாய்மார் ,பாலுட்டும் தாய்மார், ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்,முதியோர் ஆகியோருக்குத் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் நுளம்பு வலைகளும் சுகாதாரப் பொருட்களும் இன்று(13.12.2025) வெருகல் கலாச்சார மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,பிரதேச சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
சுமார் 700 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.