மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு!

(ஹஸ்பர் ஏ.எச்)

ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தினால் வெள்ளிக்கிழமை (12.12.2025) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையின் மூதூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தின் போசகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதனின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தின் தலைவர் ஆசிரியர் சக்தி சரவணபவ ஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மூதூர் பிதேச குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அறப்பணி மன்றத்தின் பொதுச்செயலாளர் இரா.இராகுலன், பொருளாளர் ச.சாந்திமலர், வரோதயநகர் பொறுப்பாளர் மீனலெட்சுமி, சமூக செயற்பாட்டாளர் கரன் மற்றும் சேனையூர் நிரோஜினி
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.