(ஏறாவூர் நிருபர் நாஸர்)
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக தொழில் ரீதியில் பாதிக்கப்பட்ட 265 குடும்பங்களுக்கு உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள் கையளிப்பட்டன. 11.12.2025
மட்டக்களப்பு – மரப்பாலம் சீயோன் தேவாலயத்தின் ஏற்பாட்டில் சீயோன் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக விவசாயம் , கால்நடை மற்றும் தோட்டப்பயிர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த நிவாரணம் பொதிகளைப் பெற்றுக்கொண்டன.
போதகர் ரொபேட் தினேஸ் , முகாமையாளர் அஷ்லி விஷால் , கணக்காளர் மற்றும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அரிசி , சீனி , பருப்பு , உப்பு , கோதுமை , டின்மின் சவர்க்காரம் உள்ளிட்ட சுமார் 7500 ரூபா பெறுமதியான 15 பொருட்கள் இப்பொதிகளில் அடங்கியிருந்தன.
மரப்பாலம் , கரடியனாறு , சிவத்த போக்கடி , மாவிலாறு , இராஜபுரம் , கித்துள் மற்றும் சின்னபுல்லு மலை ஆகிய ஏழு கிராமங்கiளைச் சேர்ந்த 265 குடும் பங்கள் இந்த நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொண்டன.
இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் சீயோன் அபிவிருத்தி திட்டம் அந்த பிரதேசங்களில் வாழும் ஆயிரத்து ஐந்நூறு பேருக்கு நான்கு நாட்கள் மூவேளை சமைத்த உணவுப்பொதிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


